"கொரானா நிலவரத்தை நெருக்கடி நிலை போல கருதி நடவடிக்கை" எடுக்கப்படும் - டெல்லி முதலமைச்சர்
கொரானா நிலவரத்தை நெருக்கடி நிலை போல கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரானா வைரசை தமது அரசு முக்கிய பிரச்னையாக கருத்துவதாகத் தெரிவித்தார். கொரானா பாதிப்புகளை எதிர்கொண்டு தீர்வு காண தமது தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும், நெருக்கடி நிலை போல கருதி நடவடிக்கை எடுக்க குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கேட்டுக்கொண்ட கெஜ்ரிவால், டெல்லியில் இரு மருத்துவமனைகளில் கொரானா ஆய்வகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்
Comments